கால அவகாசம்:
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்னும் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மத்திய அரசின் கண்காணிப்பில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் கடந்த செப்டம்பர் 7ம் தேதி அன்று neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பபதிவு தொடங்கியது.
கடந்த 22 ஆம் தேதி MBBS, BDS படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளம் வாயிலாக அக்டோபர் 3ம் தேதி மாலை வரை MBBS, BDS படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்.6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் படி அக்டோபர் மாதம் மாலை 5 மணி வரை மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் கலந்தாய்வு மற்றும் சேர்க்கை தொடர்பான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை MBBS, BDS படிப்புகளில் சேர 35,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு ஆன்லைன் வாயிலாகவே கலந்தாய்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.