தமிழகத்தில் +2 பொது தேர்வில் 1,656 மாணவர்கள் தேர்ச்சி பெற வில்லை – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு!

இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

12 ஆம் வகுப்பு மதிப்பெண் விவரம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பரவல் சற்று குறைந்த காரணத்தால் ஜனவரி மாதம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது.

இருப்பினும், வகுப்புகள் தொடங்கப்பட்டு 2மாதங்களில் மீண்டும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பரவ தொடங்கியது. இந்நிலையில் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு வாட்ஸ்ஆப் மூலமாக 12த் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

இதனை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து 12ஆம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

100 சதவிகித மாணவர்களும் தேர்ச்சி என்ற அடிப்படையில் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது மேலும், 551 முதல் 599 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 30,600 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 600க்கு 600 மதிப்பெண்களை எந்த மாணவரும் எடுக்கவில்லை எனவும் 11ம் வகுப்பில் அரியர் வைத்த 33 ஆயிரத்து 557 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வெளியிடப்பட்ட மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் எனவும், 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் விரைவில் வெளியிடப்படும்.

மதிபெண்ணில் திருப்தியில்லாத மாணவர்களுக்கு தேர்வு செப்டம்பர் அல்லது அக்டோபரில் கொரொனோ சூழலை பொருத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TN 12th Result

Official Website

Scroll to Top