திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி தமிழகத்தில் திருத்தணி கோயிலுக்கு வருவதற்கு ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை 5 நாள் தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
திருத்தணி முருகன் கோயில்:
இதனால் அரசு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஆடி கிருத்திகை என்பதால் திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் இந்த சூழலில் மக்கள் கூடுவதால் கொரோனா மேலும் பரவ வாய்ப்புள்ளது.
பக்தர்கள் இணையதளத்தில் வாயிலாக சுவாமி தரிசனம்:
மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஆடி கிருத்திகை அன்று சுவாமிக்கு நடைபெறும் பூஜைகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பதிவிடப்படும்.
அதனால் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம். திருத்தணி முருகன் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வீட்டிலிருந்தே சுவாமிக்கு நடைபெறும் அபிஷேகத்தை கண்டு கழித்து அருள் பெறலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பக்தர்கள் மத்தியில் அதிருப்தி:
ஒவ்வொரு வருடமும் திருத்தணி கோயிலுக்கு ஆடிக்கிருத்திகை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆண்டு இன்று முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை திருத்தணி கோயிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!