50 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வில் ஏன் கலந்து கொள்ளவில்லை! பள்ளி கல்வி துறை அமைச்சர் ஆலோசனை!

தற்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டு இருக்கும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 50,000 பேர் தேர்வில் கலந்து கொள்ளாதது பற்றி பள்ளி கல்வி துறை அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

பொதுத்தேர்வுகள்:

தமிழ்நாட்டில் 2022-23 ஆண்டிற்கான 10வது, 12வது பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு தேர்வுகள் முடிந்த நிலையில் பல மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது.

இது குறித்து வெளிவந்த தகவலின் படி, பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 50,000 பேர் முதல் நாள் தேர்வுக்கு வரவில்லை. அதே மாணவர்கள் இரண்டாம் நாள் தேர்விற்கும்  வரவில்லை என தெரிகிறது.

 மாணவர்கள் தேர்வுக்கு வராததற்கு காரணம்:

இது குறித்து காரணம் கேட்டபோது , 11 ஆம் வகுப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை எனவும் அவர்கள் பொதுதேர்வுக்கு வரவில்லை எனவும் விளக்கம் கொடுக்கபட்டது.

எனவே, 50,000 மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்துகொள்ளதது பற்றி பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூடத்தில் அனைத்து பள்ளி கல்வி துறை அமைச்சர்களும் கலந்து கொள்ளவார்கள் என தெரிய வந்துள்ளது. இதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Scroll to Top