தமிழகத்தில் அதிரடியாக தரம் உயர உள்ள 75 ரேஷன் கடைகள்! அரசு அறிவிப்பு!

ராதாகிருஷ்ணன் அறிவிப்பு: 

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் சிறப்பாக மற்றும் முறையாக செயல்படும் வகையில் தரம் உயர்த்த உள்ளதாக முன்னதாக அறிவிப்பு வெளியான நிலையில், இதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக கூட்டுறவு செயலர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

ரேஷன் கடைகள்:

தமிழகத்தில் மக்களுக்கு சேர வேண்டிய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சிறப்பு திட்டங்கள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களை சென்றடைகிறது. மேலும் மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகை பொருள்களையும் அரசு வழங்கி வருகிறது. ஆனால் இந்த பொருட்களை முறையாக பராமரிப்பதில்லை என்றும், ரேஷன் கடைகள் சுத்தமாக இல்லை என்றும் புகார்கள் பெறப்பட்டது.

இதற்கு காரணம், தமிகத்தில் உள்ள முக்கால்வாசி ரேஷன் கடைகள் அனைத்தும் பாழடைந்த கட்டிடங்களில் செயல்பட்டு வருவது தான். இதனால் ரேஷன் கடைகளை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று அரசு முன்னதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக கூட்டுறவு செயலர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

அதற்காக தமிழகம் முழுவதும் இருந்து 75 ரேஷன் கடைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், இவற்றை முன்மாதிரி ரேஷன் கடைகளாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு, மக்களுக்கு பல்வேறு வசதிகளும் இருக்கும் என்றும், தொடர்ந்து இதற்கான நேரடி ஆய்வுகள் அதிகாரிகள் மூலம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top