ரேஷன் அட்டைதாரர்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு! நாளை குறைதீர்ப்பு முகாம்!

ரேஷன் கார்டு:

தமிழக ரேஷன் கடைகளில் செயல்பாட்டில் இருக்கும் பயோமெட்ரிக் முறையில் பல இடர்பாடுகள் இருப்பதால் இதற்கு மாற்றாக கண் கருவிழி பதிவு முறை கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடந்து இலவச  வைஃபை வசதி விரைவில் கொண்டு வரப்படும். இதன் மூலம் ரேஷன் கடை பகுதியில் உள்ளோர்களும் இணைய வசதியை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் அக்டோபர் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது அக்.8-ம் தேதி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த முகாமில் கடைகளின் செயல்பாடுகள், உங்களுக்கு உள்ள இடர்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். மேலும் ரேஷன் அட்டைதாரர்கள் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் பதிவு மாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். அதோடு புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம், நகல் குடும்ப அட்டை கோரியும் மனுக்கள் அளிக்கலாம். குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!

Scroll to Top