கல்லூரி மாணவர்களுக்கு மறு வாய்ப்பு:
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான கல்லூரி மாணவர்கள் சேர்க்கை கடந்த ஜூன் 20ம் தேதி அன்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப் படிப்புகளில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. கடந்த ஜூலை 27ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டு தற்போது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி 24 வரை நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் உள்பட சிறப்புப் பிரிவினர்கள் பங்கேற்றனர். அடுத்த கட்டமாக பொது பிரிவினர்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கி நடைபெற்றது. தற்போது அடுத்த கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்ட படிப்பில் 2015 – 16 கல்வியாண்டிற்கு முன்பாகவும், முதுகலை பட்டப்படிப்பில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டிற்கு முன்பாகவும் பயின்று அரியர் வைத்த மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கண்ட கல்வியாண்டில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு(2023) மார்ச் மாதம் நடைபெற இருக்கும் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் விண்ணப்பித்து பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!