PM கிசான் திட்டம்:
மத்திய அரசு நாட்டின் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதில், பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. நாடு முழுவதும் உள்ள விளைநிலம் வைத்திருக்கும் விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய தகுதியானவர்கள் ஆவார்கள். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக அளிக்கப்படுகிறது.
இதுவரை நாடு முழுவதும் உள்ள பல கோடிக்கணக்கான விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். அக்டோபர் மாதத்தில் இந்த திட்டத்தின் 12-வது தவணை அளிக்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 11-வது தவணை பணம் அளிப்பதற்கு மத்திய அரசு அனைத்து விவசாயிகளும் கண்டிப்பாக e-KYC சரிபார்ப்பை செய்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இதேபோல், தற்போது இத்திட்டத்தின் 12-வது தொகையை பெறுவதற்கு கண்டிப்பாக e-KYC சோதனையை முடித்திருக்க வேண்டும் என்றும், இதனை செய்யாதவர்களுக்கு கட்டாயம் தொகை செலுத்தப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
PM கிசான் ஆதார் OTP அடிப்படையிலான eKYC செயல்முறைகள்:
- முதலில் PM Kisan இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- ஃபார்மர்ஸ் கார்னர் கீழ், eKYC தாவலைக் கிளிக் செய்யவும்.
- அடுத்த பக்கத்தில், உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, தேடல் பட்டனை கிளிக் செய்யவும்.
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு 4 இலக்க OTP அனுப்பப்படும்
- ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் OTP ஐ உள்ளிடவும்
- இப்பொழுது eKYC செயல்பாடு முடிக்கப்பட்டு விடும்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!