தமிழகத்தில் ப்ளஸ் 2 வகுப்பு சிறப்பு துணை தேர்வுகள் – இன்று முதல் விண்ணப்ப பதிவு!

தமிழகத்தில் 12ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வுகள்!

தமிழகத்தில் கொரோனா காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. மேலும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு கடந்த ஜூலை 19 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் 2020-21 ஆம் ஆண்டு தனித்தேர்வர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

12 ஆம் வகுப்பு துணை தேர்வு:

இந்த மதிப்பெண் பட்டியலில் அரசு கொடுத்துள்ள பொதுத்தேர்வு மதிப்பெண் போதவில்லை என்று கருதும் மாணவர்கள், தனி தேர்வர்கள், 10 மற்றும் 11ம் வகுப்பில் தேர்வு எழுதாத மாணவர்கள் என சுமார் 42,000 பேர் இருக்கின்றனர்.

பள்ளிக்கல்வித்துறை தெரிவிப்பு: 

தற்போது அதற்கான தேதி மற்றும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட பாடத்திற்கு மட்டும் மாணவர்கள் விருப்ப தேர்வு எழுத இயலாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

துணை தேர்வுக்கான தேதி மற்றும் நேரம்:

மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள்  23.07.2021  முதல் 27.07.2021 வரையிலான நாட்களில் (25.07.2021 ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

23.07.2021 முதல் 27.07.2021 வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி (தக்கல்) திட்டத்தில் 28.07.2021 அன்று ஆன்லைன் சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

துணை தேர்வுக்கான சிறப்பு கட்டணம்:

ரூ.1000/- வசூலிப்பு 

முக்கிய அறிவிப்பு:

துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்க சேவை மையங்களுக்கு வரும் போது கட்டாயம் மாணவர்கள்  முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதிவரை நடைபெறும் என்றும் பிளஸ் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் துணைத்தேர்வை எழுத விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி:

http://www.dge.tn.gov.in/ .

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!

Scroll to Top