மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு! ஊதிய உயர்வு!

ஊதிய உயர்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தற்போது 4% உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த அகவிலைப்படி 38% ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து இன்பகரமான செய்திகள் வரவுள்ளன.

அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் மீண்டும் 3% உயர்த்தப்பட்டு 34% ஆக ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நாட்டின் பணவீக்கம், உக்ரைன் – ரஷ்யா போர் ஆகியவற்றின் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது. அதனால் ஊழியர்கள் விலைவாசியை சமாளிக்கும் பொருட்டு அகவிலைப்படியை 4 % உயர்த்த வேண்டி கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து 7 – வது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கடந்த செப்டம்பரில் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு 38% ஆக அதிகரிக்கப்பட்டது.

இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெற்று வருகின்றனர். இந்த அகவிலைப்படி உயர்வு 2022 ஜூலை 1-ஆம் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படி மற்றும் சிட்டி அலவன்ஸ், PF கிராசுட்டி தொகையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது வரை இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top