தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடம் & கால அட்டவணை!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் 

கல்வி தொலைக்காட்சி:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி  பயிலும்  வகையில் மேல்நிலை, உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய வகுப்புகள் ஜூலை 23 முதல் துவங்க உள்ளன.

பெற்றோர்கள் கவனத்திற்கு:

அதாவது துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களை அவர்கள் சரியாக கவனிக்கிறார்களா என்பதை உடனிருந்து கவனித்து, பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் ஒவ்வொரு தேதி வாரியாக கையெழுத்திட்டு, அந்த படிவத்தை அந்தந்த வகுப்பு ஆசிரியருக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நேரம்:

  • ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1 மணிக்கும்,
  • 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை 5 மணிக்கும்,
  • 3, 4, 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  மாலை 5.30, மாலை 6 மணி, மாலை 7 மணிக்கும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

மாதம்தோறும் கால அட்டவணை:  

  1. திங்கள் கிழமை அன்று தமிழ் பாடங்களும்,
  2. செவ்வாய் அன்று ஆங்கிலமும்,
  3. புதன் அன்று கணக்கு வகுப்புகள் நடத்தப்படும்.
  4. வியாழக்கிழமை அன்று 1 மற்றும் 2 ஆம் வகுப்புகளுக்கு சூழ்நிலையியல் பாடங்களும்,
  5. 3 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு அன்று அறிவியல் பாடங்களும் நடத்தப்படும்.
  6. வெள்ளிக் கிழமை அன்று 1, 2 ஆம் வகுப்புகளுக்கு பேசும் ஓவியம்,
  7. 3 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு சமூக அறிவியல் பாடங்களும் ஒளிபரப்பு செய்யப்படும்.

குறிப்பு:

இதில் 1 முதல் 4 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரை மணி நேரம் மட்டுமே பாடங்கள் நடத்தப்படும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!

Scroll to Top