மதுரை மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நகர்ப்புற சுகாதார செவிலியர், புள்ளியியல் உதவியாளர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க அறிக்கை ஒன்றை மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 2ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவிலியர் காலிப்பணியிடங்கள்:
அதில் நகர்ப்புற சுகாதார செவிலியர் (UHN/ANM) பணியிடத்துக்கு விண்ணப்பிக்க 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு சான்றிதழ்:
- நர்ஸ் மிட் ஒயிப்,
- பலதரப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள்,
- உடற்தகுதிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்:
கணினி தட்டச்சுடன் ஓராண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும்.
இந்த தற்காலிக பணியிடங்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் வழங்கப்படும்.
மாத சம்பளம்:
இந்த பணியிடங்களுக்கு மாதம் ரூ.20000 சம்பளமாக வழங்கப்படும்.
முக்கிய குறிப்பு:
இந்த பணியிடங்கள் எந்த காரணம் கொண்டும் நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விருப்பமுள்ள மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வி தகுதி சான்றிதழ்களின் நகல்கள், புகைப்படத்துடன்
அஞ்சல் முகவரி:
‘மாநகர் நல அலுவலர், மதுரை மாநகராட்சி, 2-வது மாடி, மைய நகர்நல பிரிவு, அறிஞர் அண்ணா மாளிகை, தல்லாகுளம், மதுரை-625002′
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப ஆகஸ்ட் 2 கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!