கல்வி உதவித்தொகை:
இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் பரவிய கொரோனா பெருந்தொற்றால் மாணவர்களில் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் வாயிலாக கல்வி கற்று வந்தனர். இதனால் மாணவர்களின் கற்றல் என்பது பெறும் கேள்வி குறியாக இருந்து வந்தது. அதனால் விரைவில் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து பல்வேறு கட்ட தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கல்வித் தொகை திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள், சிறும்பான்மையினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது 1 – 10ம் வகுப்பு வரையிலான சிறுபான்மை பள்ளி மாணவர்கள் கல்வித் தொகை திட்டத்தின் கீழ் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
தகுதியும், விருப்பமும் உடைய மாணவர்கள் செப்டம்பர் 30ம் தேதி வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த காலகெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அக்டோபர் 31-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் உதவித்தொகை பெற சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களது பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உதவி தொகையானது 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ரூ.3,500 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.