தமிழக அரசு பேருந்துகளில் இலவச பயணச்சீட்டு இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசு பேருந்துகளில் இலவச பயணச்சீட்டு இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசு பேருந்து:

தமிழக அரசு அறிவித்துள்ளபடி சாதாரண கட்டணமுள்ள அரசு பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டவர்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இலவச பயணத்துக்கான டிக்கெட்டுகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து சேவைகள்:

  1. தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், கடந்த 2 மாதங்களாக பேருந்து போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
  2. ஜூலை 5ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையேயான பேருந்து சேவைகள் துவங்கியுள்ளன.

இலவச பயணம்:

தமிழகம் முழுவதும் இலவசமாக உள்ளூர் பேருந்துகளில் (நகர பேருந்து) மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட சூழ்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் அதாவது White Board பேருந்துகளில் மட்டும் பணிபுரியும் பெண்கள் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!

Scroll to Top