BSNL நிறுவனம்
நாட்டில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான Jio, Vodafone idea, மற்றும் Airtel உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கூறியிருப்பதாவது, இந்தியாவில் இன்னும் 6 மாத காலத்திற்குள் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவைகள் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்குள் நாட்டில் 90% பகுதிகளில் 5ஜி சேவைகள் கிடைக்கும் என்றும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக இவர் கூறியிருப்பதாவது, BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை அடுத்த ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு (ஆகஸ்ட் 15) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து இந்த 5ஜி சேவையானது சாமானிய மக்களுக்கும் கிடைக்கும் வகையில் மிகவும் குறைந்த விலைக்கு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில் ஜியோ நிறுவனமானது தனது 5ஜி சேவையை இந்த மாதமும், ஏர்டெல் நிறுவனமும் 2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!