தமிழக அரசு அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, ஆன்லைன் வழியிலான வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி எனவும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு:
இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகளைத் திறக்கவும், பள்ளிகளைத் திறப்பதற்கான நடைமுறைகளையும் நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசுத் தரப்பில் அதிரடியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மு.க. ஸ்டாலின் அறிவிப்பு:
12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும் மதிப்பெண் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
10 , 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் வகுப்புகளை தொடங்கலாம் எனவும், ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிகளை திறக்கவும் வலியுறுத்தியுள்ளார். அரசின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கும். பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பதவி நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.