மத்திய அரசு ஊழியர்களுக்கான GPF வட்டி விகித அறிவிப்பு வெளியீடு!

வட்டி விகிதம்:

இந்தியாவில் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 31% ஆக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் மேலும் 3% உயர்த்தப்பட்டு தற்போது 34% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 1.16 கோடி ஊழியர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகையை மேலும் 4 சதவீதம் உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தற்போது 34% இருந்து 4% அதிகரிக்கப்பட்டு 38% ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த மாத ஊதியத்துடன் 3 மாதத்திற்கான அரியர் தொகையும் சேர்த்து வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஒட்டு மொத்த ஊழியர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜெனரல் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறித்து மத்திய நிதியமைச்சகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது 2022 அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை 7.1% வட்டி விகிதத்தில் தொடரும் என்று தெரிவித்துள்ளது.

Scroll to Top