தமிழகத்தில் திடீர் என ரேஷன் கடைகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு? தமிழக அரசு உத்தரவு!!

தமிழக அரசு:

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிட்ட தேதிகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக மக்கள் சிரமம்:  

தமிழகத்தில் கொரோனாவால் மக்கள் பெரும்  அடைவோது மட்டும் இல்லாமல்  தங்களின்  வாழ்வாதாரதையும்  இழந்து போதிய வருமானம் இல்லாமல்  சிரமப்படுகிறார்கள்.

மக்கள் நலன் கருதி தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு :

மக்களுக்கு உதவும் வகையில் தமிழக முதல்வர் இலவச  உணவு பொருட்களையும், கொரோனா நிவாரண தொகைகளையும் வழங்க உத்தரவிட்டார்.

கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கனில் இடம், வழங்கும் நேரம், ஆகியவைகளை குறிப்பிட்டு தேதி வாரியாக மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்குகின்றனர்.

மே மற்றும் ஜூன் மாதங்களில் நாள் ஒன்றுக்கு 200 குடும்பங்கள் வீதம் பொருட்களும், தொகையும்  இலவச பொருட்களையும்  ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு பெரும் பயனுள்ளதாகவும்  மக்களுக்கு இலவச பொருட்களையும், நிதிகளையும் விரைவாக வழங்க ரேஷன் கடைகள் விடுமுறை நாட்களிலும் செயல்பட்டது.

ரேஷன் ஊழியர்கள் ஓய்வின்றி உழைப்பு:

பொருட்களை வழங்குவதற்கு கடந்த 2 மாதங்களில் மே மாதம் 16ம் தேதி, ஜூன் 4 ம் தேதி மற்றும் ஜூன் 11 ஆகிய விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகள் செயல்பட்டது. இதனால் ரேஷன் ஊழியர்களும் ஓய்வின்றி உழைத்தனர்.

விடுமுறை நாட்கள்:

தற்போது அரசு ஜூலை மாதம் (17.07.2021) (18.07.2021) ஆகிய தேதிகளிலும் ஆகஸ்ட் மாதம் (14.07.2021) ஆகிய தேதியிலும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வழங்க உத்தரவிட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!

Scroll to Top