தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று முதல் வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டாம் பருவ பயிற்சி அக்டோபர் 6ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ பாடத்திட்டம் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி அண்மையில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் .அதனால் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி இந்த பயிற்சியை முறையாக நடத்தி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!

Scroll to Top