ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! உடனே இதை செய்யுங்கள்!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக அரசு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் அரசு வழங்கும் பல சலுகைகளும் கிடைக்கின்றன.அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டில் உங்களின் மொபைல் நம்பர் மாறி இருந்தால் உடனடியாக அதனை அப்டேட் செய்ய வேண்டும். ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது மிகவும் சுலபம்தான்.

அதற்கு முதலில் மாநில அரசின் அதிகாரப்பூர்வ ரேஷன் இணைய பக்கத்திற்கு https://www.tnpds.gov.in/செல்ல வேண்டும். அதில் உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை புதுப்பிக்கவும் என்று எழுதப்பட்டிருப்பதை கிளிக் செய்து உங்கள் தகவல்களை நிரப்ப வேண்டும். ஆதார் எண் மற்றும் ரேஷன் கார்டு எண் உள்ளிட்டவற்றை நிரப்ப வேண்டும். பிறகு குடும்பத் தலைவரின் பெயரை எழுத வேண்டும். இறுதியாக புதிய மொபைல் எண்ணை உள்ளிட்டு சேமிக்கவும். தற்போது உங்களின் புதிய மொபைல் எண் ரேஷன் கார்டில் புதுப்பிக்கப்படும்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!

Scroll to Top