மின்சாரத்துறை அமைச்சர் தெரிவிப்பு:
தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக கருதும் மின் நுகர்வோர்கள் புகார் அளித்தால் ஆய்வு செய்து கட்டணம் திருத்தம் செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்து உள்ளார்.
மின்கட்டணம் உயர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மின் ஊழியர்கள் வீடுகள், கடைகளுக்கு நேரில் சென்று மின் கணக்கீடு செய்ய முடியாத நிலை உள்ளது.
தமிழ்நாடு மின்வாரியம் அளித்த 3 சலுகைகள்:
- கடந்த வருடம் மே மாத தொகையை இம்மாதம் செலுத்தலாம்
- இந்த வருடம் மார்ச் மாத தொகையை மே மாத கட்டணமாக செலுத்துவது
- வீட்டின் மின் மீட்டரை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் மின் வாரியத்திற்கு அனுப்பி வைப்பது.
அதற்கேற்ற கட்டணம் கணக்கிட்டு செலுத்தலாம் என்ற சலுகைகளை தமிழ்நாடு மின்வாரியம் அளித்தது.
மின் வாரியம் தெரிவிப்பு:
மே மற்றும் ஜூன் மாதங்களில் கடந்த ஆண்டு தொகை வசூலிக்கப்பட்டு வந்தது. கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக தெரியவந்துள்ளதால் இந்த வருட ஆகஸ்ட் மாத மின் கட்டணத்தின் போது சரி செய்யப்படும் எனவும் மின் வாரியம் தெரிவித்தது. மேலும் மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதற்கு தேவையான கால அவகாசமும் வழங்கப்பட்டது.
மின் கணக்கீடு:
தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் மீண்டும் வீடுகளுக்கு சென்று மின் ஊழியர்கள் மின் கணக்கீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
மின் கட்டணம் உயர்வதாக புகார்கள்:
இதுவரை தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக 14 லட்சம் புகார்கள் வந்துள்ளது. இந்த நிலையில் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக கருதும் மின் நுகர்வோர்கள் 94987-94987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் அதிகாரிகள் ஆய்வு செய்து மாற்றம் இருந்தால் கட்டணம் திருத்தம் செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் விளக்கமளித்துள்ளார்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்துகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!