TET தேர்வு:
தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
தேர்வுக்கான தேதிகள்:
கொரோனா பாதிப்பினால் ஆசிரியர் தகுதி தேர்வும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும். இன்னும் தேர்வுக்கான தேதிகள் வெளியிடப்படவில்லை.
இதற்காக ஆசிரியர் பணிக்கு படித்தவர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதுவார்கள். தேர்வின் முடிவுகள் வெளியானதும் அரசு தகுதியானவர்களை ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்படுவார்கள்.
இதற்கு முன்னதாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
மத்திய அரசு அறிவிப்பு:
ஆனால் மத்திய அரசு மத்திய மற்றும் மாநில ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவித்துள்ளது.
முன்னதாக அரசு அறிவிப்பு:
இதனால் இதற்கு முன்னதாக தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இனி பணி நியமனத்திற்கு தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள். இதனால் விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்று அரசு முன்னதாக அறிவித்தது.
பணி நியமன ஆணை:
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தமிழகத்தில் கடந்தாண்டுகளில் TET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடன் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!