ஆன்லைன் மூலம் சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் பெற அரசு உத்தரவு!!

அமைச்சர் அறிவிப்பு:

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகள், அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை போன்றவை பெற மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் கட்டாயமாகும். இவற்றை பெற தாலுகா அலுவலகம் சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டாம்.

ஆன்லைன் மூலம் சான்றிதழ்  பெற அரசு வெளியீடு:

அதற்கு மாற்று வழியாக ஆன்லைன் மூலமாக சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் விண்ணப்பிக்கும் இணையதளத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த இணையதளம் மூலமாக எளிதாக சான்றிதழ் பெறலாம்.

வருவாய்த்துறை அமைச்சர்:

தமிழகத்தில் சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் பெற விண்ணப்பித்து 4 நாட்களுக்குள் கிடைக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அல்லது அமைச்சரிடம் நேரடியாக புகார் அளிக்கலாம் என வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்துகொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!

Scroll to Top