WORK FROM HOME:
இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி அவர்கள் சமீபத்தில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தனது நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
அந்த வகையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் WORK FROM HOME குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹைபிரிட் முறையில் (கலப்பின முறையில்) பணியாற்ற தொடங்கியுள்ளனர். அதாவது ஊழியர்கள் ஒரு வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும். மற்ற நாட்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர். இன்ஃபோசிஸ் நிறுவனமும் தற்போது இந்த கலப்பின முறையை தான் பின்பற்றி வருகிறது.
இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் இது குறித்து செய்திகளுக்கு அறிவித்துள்ளார். மேலும், தங்களின் இந்திய அலுவலகங்களில், அலுவலகத்தில் சுமார் 45,000 ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!