ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய கோரிக்கை! முழு விவரம் உள்ளே!

கோரிக்கை:

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தனர்.

தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு வேண்டி கோரிக்கை விடுத்து வருகின்றனர். அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டது. இதனால் மொத்த அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். அதே போல தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து தமிழக அரசு ஊழியர்கள் சார்பாக முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் அகவிலைப்படியை 4% உயர்த்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கடை ஊழியர்களும் பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தென் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ரேசன் கடைகளுக்கு விற்பனையாளர், கட்டுநர்களை அருகாமையில் உள்ள கடைகளுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் மாவட்ட அளவில் சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்து வயது மூப்பு, பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும். அத்துடன் பணியாளர்களுக்கு கருணை ஊதியம் விரைந்து வழங்க வேண்டும். மேலும் பயிர் கடன், நகைக் கடன், மகளிர் குழு கடன் தள்ளுபடியில் அரசு உரிய தொகையான 7% வட்டி வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Scroll to Top