இந்தியாவில் ரயில் போக்குவரத்தையே பெரும்பாலும் பொதுமக்கள் தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவை IRCTC என்ற ஆப் மூலமாக மேற்கொள்ளலாம். இதில் தற்போது புதிய விதிமுறைகளை ரயில்வே வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
டிக்கெட் முன்பதிவு:
இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிகவும் குறைவான விலையில் கிடைப்பதால் சாமானிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது ரயில் டிக்கெட்டுகளை IRCTC என்ற ஆப் மூலமாக நீங்கள் வீட்டில் இருந்தவாறு முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் IRCTCயில் ஒரு பயனாளர் தனது கணக்கை பயன்படுத்தி 12 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என இருந்தது.
ஆனால் தற்போது நீங்கள் IRCTC-யின் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் 2 மடங்கு கூடுதலான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். அதாவது ஒரு மாதத்திற்கு 24 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும். இந்த நிலையில் IRCTC மூலமாக முன்பதிவு செய்வதில் சில விதிமுறைகளை ரயில்வே வாரியம் மாற்றியமைத்துள்ளது. அதாவது பயனர்கள் ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடியை வெரிஃபை செய்ய வேண்டியதை கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி நீங்கள் இதனை செய்யவில்லையெனில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.
மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடி வெரிஃபை செய்வதற்கான வழிமுறைகள்:
1. இதற்கு முதலில் IRCTC ஆப் அல்லது IRCTC-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. இதில் verify என்பதை தேர்வு செய்து, அதன்பின்பு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிட வேண்டும்.
3. இப்போது verify என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
4. இப்பொது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.
5. இதனை உள்ளிட்ட பிறகு ஈமெயில் ஐடியில் பெறப்பட்ட குறியீட்டை உள்ளிட வேண்டும்.
6. இறுதியாக உங்களின் மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடி ஆகிய இரண்டும் verify செய்யப்பட்டு விட்டது.