ஜியோவின் 5ஜி இணைய சேவை துவக்கம்! அன்லிமிடட் டேட்டா! மிஸ் பண்ணிடாதீங்க!

இந்தியாவில் கடந்த அக்டோபர் 1ம் தேதி நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5ஜி சேவை தொடங்கப்பட்டது. நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் அதிகாரபூர்வமாக 5ஜி சேவையை அறிமுகம் செய்தார். இந்த நிலையில் முன்னணி நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்கி வருகிறது.

5ஜி சேவை:

இந்தியாவில் தற்போது 5ஜி இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 26ம் தேதி 5ஜி சேவை வழங்குவதற்கான ஏலம் நடைபெற்றது. தொடர்ந்து 7 நாட்கள் 40 சுற்றுகளாக நடந்த இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்றனர். 5ஜியானது 4ஜியை விட 10 மடங்கு அதிக வேகம் கொண்டது என கூறுகின்றனர். முதல் கட்டமாக இந்த 5ஜி சேவை டெல்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட 13 பெரு நகரங்களில் சோதனை அடிப்படையில் கொண்டு வரப்படும்.

அதன் பிறகு படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 1ம் தேதி நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5 ஜி சேவையை பிரதமர் தொடக்கி வைத்தார். இந்த நிலையில் ஜியோ நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்க துவங்கியுள்ளது. இதனையடுத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 1gbps வேகத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா கிடைக்கிறது. மேலும் ஜியோ 5ஜியை தொடங்கியுள்ளதை அடுத்து வெல்கம் ஆபர்களையும் வழங்கி வருகிறது.

இது அனைவருக்கும் கிடைக்காது தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரத்தில் உள்ளோர்களுக்கு மட்டுமே கிடைக்கும். மற்ற நகரங்களுக்கான 5ஜி ட்ரையல் சேவை படிப்படியாக கொண்டு வரப்படும் என்று ஜியோ தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தற்போது உள்ள ஜியோ சிம் அல்லது தங்களது 5ஜி ஸ்மார்ட்போனை மாற்ற வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தானாகவே ஜியோவின் ட்ரூ 5ஜி சேவைக்கு மாற்றப்படுவீர்கள். ஜியோவின் 5ஜி திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ள 4ஜியை போலவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top