மாணவர் சேர்க்கை:
நாடு முழுவதும் மத்திய அரசின் பாட திட்டமான மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் படி அனைத்து யூனியன் பிரதேச மற்றும் மாநிலங்களிலும் கேந்திர வித்தியாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் பணியாளர்கள், மாநில அரசு பணியாளர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் ராணுவ பணிகளை சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்காக கேந்திர வித்தியாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டது.
1 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் அனைத்து பள்ளிகளிலும் உள்ளது. முன்னதாக 1ம் வகுப்பில் சேர்வதற்கு மாணவர்கள் 5 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும், ஆனால் சமீபத்தில் மத்திய அரசு கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் 1ம் வகுப்பில் மாணவர்கள் சேர்வதற்கு 6 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தற்போது சென்னை ஐ.ஐ.டி.,வளாகத்தில் செயல்பட்டு வரும் கேந்திர வித்தியாலயா பள்ளியில் புதிய திட்டமான ‘பால்வாடிகா’ என்ற ப்ரீ.கே.ஜி, எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகுப்புகளுக்கு முறையாக மாணவர்கள் 3 வயது முதல் 6 வயது வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளுக்கு மாணவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.1,500 கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கு மாணவர்களை சேர்க்க விரும்புபவர்கள் அக்டோபர் 10ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பள்ளியில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். இதனை குறித்த மேலும் அதிக தகவல்களை தெரிந்து கொள்ள 7305160907, 9710588122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.