அஞ்சலகத்தில் பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்!

பெண்கள் மற்றும் சிறுமியர்கள் பயன் பெரும் வகையில் பெண்களுக்காக மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் தபால் துறையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டிற்கான(2023-24) பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த போது அதில் பெண்களுக்கான சிறுசேமிப்பு திட்டமான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் குறித்து அறிவித்தார். இந்தத் திட்டத்தில் பெண்கள் அல்லது சிறுமியர் பெயரில் ரூ.2 லட்சம் வரை 2 ஆண்டு காலத்திற்கு டெபாசிட் செய்யலாம்.

இதற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஒருவர் 2 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம்டெபாசிட் செய்தால்,  2 வருடம் முடிவில் ரூ.31,125  கிடைக்கும். இத்திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்குகிறது. இந்த திட்டம் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். பெண்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

Scroll to Top