அரசு மருத்துவ கல்லூரி:
ராமநாதபுரத்தில் ரூ.455 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரியில் கட்டிட பணிகள் ஏறத்தாள முடிவடைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது.
- இதை தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் விரைவில் நேரடியாக வந்து ஆய்வு செய்து பரிந்துரை செய்த பின் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும். அதற்கு ஏற்றவாறு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 9 இணை பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் விரைவில் கூடுதல் ஆசிரியர்கள் தேவை என அறிவிப்பு தெரிவித்தன.
இது குறித்து அரசு மருத்துவ கல்லூரி டீன் மலர் வண்ணன் அவர்கள் கூறியதாவது, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் அளவிற்கு முடிந்துள்ளது.
- அரசு மருத்துவமனையில் நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் மையமும் அமைக்கப்படவுள்ளது. அதற்கான இடமும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் திறக்கப்பட்டால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு தேவைப்படும் ஆக்சிஜனை நாமே உற்பத்தி செய்து கொள்ளும் சூழல் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!