அங்கன்வாடி மையத்தில் 49,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் அறிவிப்பு?

அமைச்சர் அறிவிப்பு:

தமிழகத்தில் சத்துணவு மற்றும் இந்திய அரசால்  நடத்தப்படும் தாய் சேய் நல மையத்தில் 49,000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

அங்கன்வாடி:

அங்கன்வாடியில்  ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான  சேவைகள் திட்டத்தின் (ICDS) கீழ் குழந்தைகள் பசியால் வாடி நலமற்றவர்களாக மாறுவதைத் தடுக்கவும் அவர்களிடையே பெருமளவில் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவும் இம்மையங்கள் துவங்கப்பட்டன.

  • தமிழ்நாட்டில் இம்மையங்கள் பொதுவாக பால்வாடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

பால்வாடி பயிலும் குழந்தைகளுக்கான தேவைகள்:

  • தேவையான ஊட்டச்சத்து,
  • ஆரம்ப கால கல்வி கற்பதற்கான சூழல்,
  • குழந்தைகள் பாதுகாப்பாக,
  • ஆரோக்கியமாக வளர்வதற்கு

போன்ற தேவையான பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.

அங்கன்வாடி மையங்களில் 5 வயது நிறைவு செய்து, தொடக்கப் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை 2017 சூன் மாதம் தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மேலும், கடந்த ஆட்சியில் நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற ரூ.3,000 கோடி தேவை என்றும் அமைச்சர் அவர்கள் கூறியுள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!

Scroll to Top