இளைஞர் & விளையாட்டுக்காக தனித்துறை புதிதாக உருவாக்கப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு!

இளைஞர் & விளையாட்டுக்காக தனித்துறை புதிதாக உருவாக்கப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு!

புதுச்சேரியில் கடந்த 9 ஆம் தேதி 2023-24 ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அக்கூட்டத்தொடரில் இளைஞர் மற்றும் விளையாட்டுக்காக தனித்துறை புதிதாக உருவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு

புதுச்சேரியில் கடந்த 9 ஆம் தேதி அன்று 2023-24 ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, கடந்த 13ம் தேதி அன்று நடப்பு நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டையும் அதோடு, பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பையும் முதல்வர் ரங்கசாமி அவர்கள் வெளிட்டுள்ளார்.

இதை அடுத்து, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ. 300 வீதம் சமையல் எரிவாயு சிலிண்டருக்காக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதற்காக வருடத்திற்கு மொத்தம் 12 சிலிண்டருக்கு ரூ. 3600 வரை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதன் மூலமாக அரசுக்கு கூடுதலாக ரூ.126 கோடி செலவாகும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, துறை வாரியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இளைஞர் & விளையாட்டுக்காக தனித்துறை புதிதாக உருவாக்கப்படும் என சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார். மேலும், இதற்காக ரூ.530 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Scroll to Top