தமிழக ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு! சுற்றறிக்கை வெளியீடு!

ரேஷன் கடை:

இந்தியாவில் ரேஷன் கார்டு திட்டம் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் குறைவான விலையில் மளிகை பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைமையிலான அரசு ரேஷன் கடைகள் வாயிலாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்குவதில் மக்கள் பல இடர்பாடுகளை சந்தித்து வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது.

அதாவது சில நேரங்களில் இணைய கோளாறு காரணமாக கைரேகை பதிவாகுவது இல்லை. மேலும் வயதானவர்களுக்கு தோல் சுருக்கம் காரணமாக கைரேகை பதிவாகுவது இல்லை என்று கூறப்பட்டது. அதனால் பயோமெட்ரிக் முறைக்கு பதிலாக கருவிழி பதிவு அடிப்படையில் பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 15-ம் தேதிக்குள் தமிழகத்தில் சில கடைகளில் மட்டும் கருவிழி பதிவு முறை சோதனை அடிப்படையில் தொடங்கப்படும் என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் அந்தந்த கிராமங்களில் செயல்படும் ரேஷன் கடைகளின் ஆவணங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று உணவு வழங்கல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். அத்துடன் கிராம சபை கூட்டங்களில் பெறப்படும் புகார்களுக்கு ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Scroll to Top