10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் அடுத்த வாரத்தில் வழங்கப்படும் என அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு அடுத்த வாரம் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் சான்றிதழ்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பள்ளிகள் கடந்த ஓராண்டாக திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி பயில மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம் என்பதால் மதிப்பெண் வழங்க ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. அதன்படி 10 ஆம் வகுப்பு மதிப்பெண் மற்றும் 11 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு கடந்த ஜூலை 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தெரிவிப்பு:

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி சான்றிதழ் அடுத்த வாரத்திற்குள் வழங்கப்படும் எனவும், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய குறிப்பு:

  1. சான்றிதழ் நேரடியாக வழங்கப்படுமா?
  2. ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்யலாமா?

என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!

Scroll to Top