தமிழகத்தில் திரையரங்குகள், பள்ளிகள் திறப்பு எப்போது! முதல்வர் இன்று ஆலோசனை?

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கு நாளையுடன் ஜூலை 31 வுடன்  முடிவடைவதால், அதற்கு மேல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் திரையரங்குகள், பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஊரடங்கு நீட்டிப்பு:

இதனால் தமிழகம் முழுவதும் தற்பொழுது ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு பல வகையான சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு, ஜூலை 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக சொல்லப்படுவது என்னவென்றால்  பள்ளிகள், திரையரங்குகள், சுற்றுலா தலங்கள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. இதைதவிர மற்ற அனைத்து சேவைகளும், கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகிறது.

கேரளா மாநிலம்:

இதனிடையே தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா புதிய பாதிப்புகள் திடீரென அதிகரித்துள்ளதால் அங்கு மீண்டும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் இன்று ஆலோசனை:

இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள படி, ஜூலை 30 ஆம் தேதியுடன் தற்போதுள்ள முழு ஊரடங்கு முடிவடையவுள்ளதால், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின், தலைமை செயலர், சுகாதார செயலர் உட்பட பல உயர்மட்ட அதிகாரிகளுடன் இன்று (ஜூலை 30) ஆலோசனை செய்து வருகிறார்.

முதல்வர் வெள்ளியிட்ட தகவல்:

இதையடுத்து தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டால் திரையரங்குகள், பள்ளிகள் மீண்டுமாக திறக்க அனுமதி கொடுக்கப்படலாம் எனவும், இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!

Scroll to Top