தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு மின் இணைப்பு துண்டிப்பு?

மின் கட்டணம்:

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மின் வாரிய ஊழியர்கள் பல வீடுகளுக்குச் சென்று மின் கணக்கு எடுக்காமல் இருக்கின்றனர். ஆனால் பல ஊர்களில் குறிப்பிட்ட தேதியில் மின் கட்டணம் செலுத்தாத காரணத்தால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகினது

இதனால் கால தாமதமாகி மின் கட்டணம் செலுத்துபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.  தற்போது நீட்டித்து கொடுக்கப்பட்ட கால அவகாசத்தை தாண்டியும் சிலர் மின் கட்டணத்தை செலுத்தாததால், அவர்களது இணைப்புகளை துண்டிக்கும் பணிகளை மின்சார வாரியம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மின் இணைப்பு:

  1. கொரோனா 2 ஆம் அலை தடுப்பு கட்டுப்பாடுகளாக கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
  2. அதனால் கடந்த மே மாதத்துக்கான மின் கட்டணத்தை மார்ச் மாத அளவீடுகள் படி செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டது.
  3. எனினும் இந்த மின் கட்டணம் அடுத்து வரும் ஜூன் மாத கணக்கீட்டில் கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மின் கட்டணம் வசூலிப்பு:

மின் கட்டணத்தை செலுத்த மே 10 முதல் 24 வரை கடைசி நாளாக கொடுக்கப்பட்டவர்களுக்கு கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்டது.

அரசு அறிவித்த அளவீடுகளை விட அதிகளவு மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் தற்போது எழுந்துள்ளது. ஆனால் முழு ஊரடங்கு  காரணமாக பலரால் குறிப்பிடப்பட்ட தேதிக்குள் மின் கட்டணத்தை செலுத்த முடியவில்லை.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!

Scroll to Top