தமிழகத்தில் 15 நாளில் ரேஷன் கார்டு கிடைக்கும்! கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்!

தமிழக அரசு:

தமிழகத்தில் அரசு சார்பில் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய ரேஷன் அட்டைகள் பெற விண்ணப்பிப்போருக்கு 15 நாட்களில் ரேஷன் அட்டைகள் கிடைக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர்  பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கோவை:

”விண்ணப்பம் அளித்தால், தமிழகத்தில் 15 நாளில் ரேஷன் கார்டு வழங்கப்படும்,” என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

ரேஷன் அட்டைகள்:

தமிழக அரசு சார்பில் மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. மே மற்றும் ஜூன் மாதங்களில் கொரோனா நிவாரணமாக ரூ.4000 இரண்டு தவணையாக வழங்கப்பட்டது. மேலும் 14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு, பொங்கல் பரிசு, வேட்டி, சட்டை உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களும் பெற ரேஷன் கடைகளை மக்கள் நாடுகின்றனர்.

கலெக்டர் அலுவலம்: 

இந்நிலையில் புதிதாக ரேஷன் அட்டைக்கு பெற பலர் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால் கொரோனா நிவாரணம் வழங்குவது மற்றும் தொடர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டுறவு துறை அலுவலர்களுக்கான பணி திறனாய்வு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அலுவலர்கள் நடவடிக்கை தெரிவிப்பு: 

புதிய மருந்தகங்கள் மற்றும் புதிய திட்டங்கள் தொடங்கவும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக அளவில் பயிர்க்கடன் வழங்கவும், அதை தாமதமின்றி வழங்கவும், விவசாயிகள் கேட்கும் உரங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் 2021-22 ஆம் ஆண்டு சுய உதவி குழுக்களுக்கு 2,570 கோடி ரூபாய் கடன் வழங்க மாநில அளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்.

Scroll to Top