தமிழக ரேஷன் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! எந்தெந்த நாட்கள்!!

கடைகள் அடைப்பு என அறிவிப்பு: 

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் சலுகைகளை கொடுக்கும் பணி இருப்பதால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மே 16, ஜூன் 4, 11 உள்ளிட்ட தேதிகளில் விடுமுறை அளிக்கப்படாததால், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூலை 24, ஆகஸ்ட் 14 ல் ரேஷன் கடைகள் 2 நாட்கள்  விடுமுறை  என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த மாதத்தில் கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் தொகை இலவச மளிகை பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் கொடுக்கப்பட்டு வந்தது.

 ஊழியர்களுக்கு சிக்கல்:

அதனால் ரேஷன் கடை ஊழியர்கள் ஓய்வில்லாமல் பணியை மேற்கொண்டு வந்ததால், வழக்கமான விடுமுறை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.

அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் தற்போது தஞ்சாவூர் மாவட்ட நியாய விலை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!

Scroll to Top