ரேஷன் கடைகள்:
ரேஷன் கடைகளில் பனை வெல்லம் மற்றும் அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன் படி தலா ரூ.10 விலையில், 24 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய பாக்கெட் விற்பனையை அமைச்சர் பெரியசாமி தொடங்கிவைத்தார். ஆனால் இந்த பொருள்களை கட்டாயம் வாங்க சொல்லி பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ரேஷன் கடைகளில் 2 கிலோ, 5 கிலோ எடையுள்ள சமையல் சிலிண்டர்கள் விற்பனையையும் தொடங்கி வைத்தார். மேலும் இந்த அறிவிப்பு குறித்து உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், அரசின் உணவுத் துறை மூலமாக கூட்டுறவு மொத்த அங்காடிகள், சுயசேவை பல்பொருள் அங்காடிகளில் தரமான பொருள்களை விற்பனை செய்கிறோம்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!