தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து ஆர்வம்?

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கருத்து:

  • தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடிய நிலையில் உள்ளன.
  • மேலும் தமிழக அரசு, பள்ளிகள் திறப்பு தேதி குறித்து எப்போது அறிவிக்கும் என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆவலாக காத்து வருகின்றனர்.  தமிழகத்தில் தற்போது மாணவர்கள் சேர்க்கை தொடங்கியிருப்பது அனைவர்க்கும் மகிழ்ச்சியாக  உள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட்டால் தான் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையே பிணைப்பு இருக்கும்.

பள்ளிகள் திறப்பு:

  1. மேலும் மாணவர்களின்  நலன் கருதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
  2. ஆனால் அவை நேரடி வகுப்புகளில் தரும் பலனை தரவில்லை.
  3. பள்ளிகளுக்கு வந்து பெற்றோர்கள் இலவச பாட புத்தகங்களை வாங்கி செல்வது சற்று நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
  4. ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களை அமர வைப்பது சவாலான ஒன்று.
  5. விடுமுறை நாட்களை எண்ணி காத்திருந்த மாணவர்கள் தற்போது பள்ளி திறப்பு நாட்கள் குறித்து எதிர்பார்ப்பதாக தெரிவித்து உள்ளனர்.
  6. தற்போது பள்ளிகள் திறக்கப்படாததால் நன்கு படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன் கூட பின்தங்கி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!

Scroll to Top