பொது மக்களுக்கு ஓர் நற்செய்தி !! RTE – யில் மாணவர் சேர்க்கைகான விண்ணப்பம் தொடக்கம்!!

முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு:

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஏழை, எளிய மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கு தனியார் பள்ளிகளில் ஆண்டுதோறும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு தகுதியுடைய மாணவர்களுக்கு 8ம் வகுப்பு வரை  இலவச கல்வி பெறும் வாய்ப்பு கிடைக்கிறது.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு  அடிப்படையில் சேர்க்கப்படும் மாணவர்களுகான முழு கல்வி செலவையும் அரசே ஏற்கிறது.

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டம்:

மேலும் அதற்கான விண்ணப்பத்தை ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 ம் தேதி வரை ஆன்லைன் மூலம்மாக  பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

  • எல்.கே.ஜி சேரும் மாணவருக்கு 31.07.2021 அன்று 3 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
  • பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
  • தேர்தெடுக்கப்படும் பள்ளி மாணவரின் இருப்பிடத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் இருக்க வேண்டும்.
  • பிறப்பு சான்றிதழ், வருமான சான்று, சாதி சான்று, மருத்துவமனை சான்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு போன்ற சான்றிதழ்கள்  அவசியமாகும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!

Scroll to Top