பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் நடப்பாண்டில் தான் பள்ளிகளில் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு பின் வழக்கம் போல் முதல் பருவ தேர்வுகளான காலாண்டு தேர்வுகள் நடந்துள்ளது. மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளுக்கு நீண்ட நாட்கள் கழித்து சென்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், நேரடி வகுப்புகள் நடக்காத காரணத்தால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசின் ஆய்வின் மூலம் தெரியவந்தது.
இதனால் பல சிறப்பு திட்டங்களை வகுப்பு வாரியாக அரசு அறிவித்து அவற்றை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் சிறப்பாக தங்கள் கல்வியின் முழு சாராம்சத்தையும் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு தேதிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது. திட்டமிட்டபடி தேர்வுகள் அனைத்தும் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்து அக்டோபர் 1ம் தேதி முதல் காலாண்டு மற்றும் ஆயுத பூஜை விடுமுறைகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான பள்ளிகள் திறப்பு தேதி குறித்து அறிவிப்பு வெளியிடபடாமல் இருந்தது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையின் மெட்ரிக் இயக்குனர் கருப்பசாமி அவர்கள் தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும் அக்டோபர் 10ம் தேதி முதல் மீண்டும் திறக்க வேண்டும் என்றும், பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அனுமதி பெற்று சிறப்பு வகுப்புகளை விடுமுறை காலத்தில் நடத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.