சென்னையி தொடர் விடுமுறை காரணமாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நேற்றுடன் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த வாரம் சரஸ்வதி பூஜை காரணமாக தொடர் விடுமுறை நாட்கள் வருகிறது. அதனால் சென்னையில் இருந்து 938 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரி விக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பலர் தங்களுடைய சொந்த ஊரை விட்டு விட்டு வேலைக்காக வந்து இருக்கின்றனர். அவர்கள் விடுமுறை என்றாலே உடனே சொந்த ஊருக்கு பயணம் செய்ய நினைக்கின்றனர். அந்த வகையில் தமிழக பள்ளிகளில் நேற்று (செப் 30) முதல் காலாண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தசரா பண்டிகைகள் வருவதால், அடுத்த வாரம் தொடர் விடுமுறை வர இருக்கிறது.

அதனால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்ய பலர் திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை பேருந்து நிலையங்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு இருக்கின்றனர். மேலும் பலர் சொந்த ஊருக்கு செல்ல பேருந்து இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்று பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 938 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும் நேற்று சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 2,844 பேருந்துகளில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 200 பயணிகள் பயணம் செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் நாட்களில் கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் பேருந்துகள் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் அரசு எச்சரித்துள்ளது.

Scroll to Top