தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு தொடக்கம்:
- தமிழகத்தில் கொரோனா காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி அடைவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்கள் மேற்படிப்புக்காக கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கலை, அறிவியல் கல்லூரிகள்:
இதற்கிடையில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கியுள்ள நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கை பணிகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று (ஜூலை 26) முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு நேரிடையாக வந்தும் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.
ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வகுப்பறையில் மாணவ, மாணவிகள் சமூக இடைவெளி விட்டு அமருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் பி.இ., பி.டெக் படிப்புகளில் சேருவதற்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. ஆக 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதை தொடர்ந்து செப் 4-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 25ஆம் தேதி இரண்டாம் எண் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்வு அட்டவனை:
- செப் 7ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
- அக்டோபர் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடைபெறும்.
தொழில் நுட்பக் கல்வி இயக்ககம்:
- அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது.
விண்ணப்ப பதிவு:
- தமிழகத்திலுள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
- தளங்களில் விண்ணப்பங்களை www.tngasa.org, www.tngasa.in என்ற இணையதயத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!