தமிழக பள்ளி மாணவர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – வெளியான உத்தரவு!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய விஷயமாக இருந்து வரும் EMIS எண் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

EMIS எண்:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில், தனியார் பள்ளிகளை விட நல்ல தரத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விரைவில், சிபிஎஸ்ஐ தரத்தில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் இருந்து அதிக மாணவர்கள் அரசு பள்ளியை நோக்கி படை எடுத்து வருகின்றனர்.

இதேபோல், அரசு பள்ளிகளில் படிக்கும் அல்லது படித்து முடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை முதல் உயர்கல்வியில் இடஒதுக்கீடு வரை பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், தனியார் பள்ளிகளுக்கு என்று தனியாக மாவட்ட அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது போல் பல அதிரடி நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் தனித்தனியாக குறிப்பிட்ட EMIS எண்ணில் பதிவு செய்யப்படுகிறது.

இந்த எண்ணில் மாணவரின் தரவுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அதன் மூலமே மாணவர் சேர்க்கை நடைப்பெறும். தற்போது 14, 16, 18 ஆக உள்ள மாணவரின் EMIS எண் இனி, மாணவர்கள் எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் 10 இலக்கமாக மாற்றப்பட உள்ளது. படிப்படியாக புதிய எண், பதிவுகளிலும் மாற்றப்படும். இதனால் பழைய EMIS எண்ணை தலைமை ஆசிரியர்கள் குறித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!

Scroll to Top