TN 12th Result 2021 | தமிழக +2 தேர்வு முடிவுகள் வெளியானது!

தமிழகத்தில் இன்று 12ம் வகுப்பு மாணவர்களின் இறுதி மதிப்பெண்கள் காலை 11 மணி அளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

Tamilnadu HSC Result 2021

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை கற்றனர். தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதத்தில் பொதுத்தேர்வு நடத்த அரசு முடிவு செய்தது. இருப்பினும் தொடர்ந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பாதிப்புகள் காரணமாக பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் மாணவர்களுக்கு மாற்று முறையில் மதிப்பெண் வழங்க முடிவுசெய்தது.

TN +2   தேர்வு முடிவுகளை கண்டறியும் இணையத்தளமுகவரி:

சரியாக இன்று காலை 11 மணியளவில்  தங்களின் பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து தங்களின் மதிப்பெண் பட்டியல்களை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள், www.tnresults.nic.inwww.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.in,

www.dge.tn.gov.in என்ற இணைய தளங்களில் வெளியிடப்படும்.

 

Download TN 12th Result 

Scroll to Top