தமிழகத்தில் பேருந்து ஓட்டுநர்கள், பணியின் போது செல்போன்களை உபயோகிக்க கூடாது என கண்டித்து சில வழிகாட்டுதல் நடைமுறைகளை வெளியிட்டு நெல்லை மண்டலப் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
செல்போன் தடை:-
- பேருந்து ஓட்டுநர்கள் கண்டிப்பாக அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும். பேருந்து ஓட்டுநர்கள் சிலர் பணியின் போது செல்போனை பயன்படுத்துவது குறித்து அடிக்கடி புகார் எழுந்துள்ளன.
- வண்டியை செலுத்தும் போது செல்போனில் பேசுவ தால் ஓட்டுநர் கவனம் சிதறி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பயணிகள் கடுமையாக பயம் அடைகின்றனர்.
- பொதுவாக வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் போது செல்போன்களை பயன்படுத்த கூடாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.
- இத்தனையும் மீறி செல்போன் பேசிக்கொண்டு சாலைகளில் வாகனங்களை ஒட்டி செல்லும் போது விபத்துகள் ஏற்படுகிறது.
- இதனை தடுக்க பல வித கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், விபத்துகள் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போனை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
- அத்துடன், ஓட்டுநர்கள் பேருந்து இயக்கும்போது கட்டாயமாக செல்போனை பயன்படுத்தக்கூடாது எனவும், தன்னிடம் இருக்கும் செல்போனை நடத்துநரிடம் கொடுத்து வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இதை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!