தமிழக அரசு பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்! விளக்கம்…

12 ஆம் வகுப்பு மதிப்பெண்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது சிரமம் என்பதால் அனைவருக்கும் தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண் குறிப்பிடாமல் தேர்ச்சி என குறிப்பிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு பிளஸ் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும்,  மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு கட்டாயம் வர உத்தரவிட்டு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசு தேர்வுகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை:

இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் எவ்வாறு தயாரிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை குழு அமைக்கப்பட்டு அதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Scroll to Top