தமிழகத்தில் 1 முதல் 9 வரை- ஏப்ரல் 17ஆம் தேதி இறுதி தேர்வு துவக்கம்:
தமிழகத்தில் தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் 1-9 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு முன்கூட்டியே நடத்த தமிழக கல்வித்துறை திட்டம்.
தேர்வு முன்கூட்டியே நடத்த கரணம்:
தற்போது, தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வரும் காரணத்தால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆண்டு இறுதி தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு முடிவு.
அதோடு, இந்த வருடம் வெயிலின் தாக்கம் மற்றும் வெப்ப காற்று வீசக்கூடும் என்று வானிலை அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கபடுவார்கள் என்பதால், மாணவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 24 தேதிக்கு முன்பாகவே தேர்வை நடத்தி முடிக்க தமிழக அரசு திட்டம்.