மதுரையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வினாத்தாள் இன்று முதல் தொடக்கம்!!

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வினாத்தாள் தயாரிப்பு குழு

டி.ஆர்.பி., இயக்குனர் தெரிவிப்பு:

தமிழகத்தில் நடைபெறும் டி.ஆர்.பி தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துவங்கியுள்ளது. வரும் ஜூலை 31 வரை பணிகள் நடைபெறும் என டி.ஆர்.பி., இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக வினாத்தாள் தயாரிக்கும் பணி சென்னையில் நடைபெறும். ஆனால் இந்த வருடம் கொரோனா பேரிடர் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு பணிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. பல்கலை கலைக்கழகத்தில் 150 பேர் பங்கேற்பதற்கான இட வசதி  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TRB தேர்வு வினாத்தாள் தயாரிப்பு:

கல்லுாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுகள் டி.ஆர்.பி.,யால் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்தகட்டமாக நேர்முக தேர்வு நடத்தப்பட்டு பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கபடுகின்றனர்.

மேலும் கொரோனா பரவல் காரணமாக எவ்வித தேர்வுக்கும் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர்கல்வி துறை சார்பாக அமைச்சர் பொன்முடி தலைமையில் பொது கூட்டம் நடைபெற்றது. அதில் பல்கலைக்கழகங்களிலும் அதன் இணைப்பு கல்லூரிகளிலும் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் பல்கலை கழகம் மற்றும் கல்லூரிகளில் பேரரிசியர்கள் மற்றும் அலுவலக பணியாள நியமனங்களில் உள்ள முறைகேடுகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக டி.ஆர்.பி தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துவங்கியுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!

Scroll to Top